தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொது இடங்களில் புகைத்தால்... அதிகாரிகள் எச்சரிக்கை

 பொது இடங்களில் புகைத்தால்... அதிகாரிகள் எச்சரிக்கை

 பொது இடங்களில் புகைத்தால்... அதிகாரிகள் எச்சரிக்கை


ADDED : மார் 01, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: 'பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம் விதிப்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்' என, கோலார் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

பொது இடங்களில் புகைப்பிடித்தல், போதை பொருள் பயன்படுத்துவதை தடை செய்தல், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பீடி, சிகரெட், புகையிலை பொருட்களை விற்பனை செய்யgfகூடாது என்ற உத்தரவு எழுத்தில் மட்டுமே இருக்கிறது. பல இடங்களில் அமலாகவில்லை.

ராபர்ட்சன்பேட்டையில், புகையிலை கட்டுப்பாட்டு பிரிவினர், சுகாதாரத்துறையினர், தங்கவயல் போலீஸ் துறையினர் இணைந்து திடீரென பஸ்நிலையம், மார்க்கெட், சில்லரை கடைகள், டீக்கடைகள் உட்பட பல இடங்களில், திடீர் சோதனை நடத்தினர்.

சட்டவிரோதமாக செயல்பட்ட சிலருக்கு எச்சரிக்கையும், அபராதமும் விதித்தனர்.

புகையிலை மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு, அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர். பொது இடங்களில் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

கோலார் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் மாவட்ட ஆலோசகர் பி. முகமது கூறுகையில், ''ஏற்கனவே இது தொடர்பாக பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தும் பலரும் சட்டத்தை மீறி வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

சுகாதாரத்துறையின் பிரசன்னகுமார், விஜயேந்திரா, போலீஸ் துறையின் ராம ஆஞ்சனப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us