sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு

/

 மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு

 மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு

 மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு


ADDED : மார் 07, 2026 06:17 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளர் நலத்துறை l மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாத விடாயின் போது, ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கப் படுகிறது

l கர்நாடக தொழிலாளர்கள் நலன் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின், 43,936 பயனாளிகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், 39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

l கட்டட பணியாளர்கள் பிள்ளைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில், கர்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன் ஆணையம் சார்பில், தலா, 60 கோடி ரூபாய் செலவில், தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்துக்கு, 600 கோடி ரூபாய் செலவிடப்படும்

l ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படித்து வரும், கர்நாடக கட்டட தொழிலாளர்கள் நலன் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்விக்கு, கடந்தாண்டு, 42 உறைவிட பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.. 2026 - 27ம் ஆண்டு கூடுதலாக, 62 உறைவிட பள்ளிகள் திறக்கப்படும் 104 உறைவிட பள்ளிகளும் வாடகை கட்டடங்களில் துவக்கப்படும்

l கட்டட தொழிலாளர்களின் பிள் ளைகளின் உயர் கல்விக்காகவும், திறன் மேம்பாட்டுக் காகவும் ஹூப்பள்ளி - தார்வாட் மாநகரில், அதி நவீன வசதிகள் கொண்ட, 200 கோடி ரூபாயில், 'திறன் பயிற்சி அகாடமி' அமைக்கப்படும்

l வெவ்வேறு துறைகளில் பணியாற்றும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அவரவர் திறமைக்கு ஏற்ப, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில், ஆன்லைன் வேலை பரிமாற்ற மையம் அமைக்க, 'தொழில் பாக்யா' திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

l தொழிலாளர் இன்சூரன்ஸ் சொசைட்டி மூலமாக, 50 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன

l ஹூப்பள்ளி, இந்திரா நகர், மைசூரு மற்றும் தொட்டபல்லாபூரில், பாரா மெடிக்கல் கோர்ஸ், இந்திரா நகரில் மூன்று ஆண்டுகள் பி.ஜி., கோர்ஸ் துவக்கப்படும்

l மார்பக புற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் திட்டம் சோதனை முறையில், பெங்களூரில் செயல்படுத்தப்படும்.

l ராய்ச்சூர், விஜயபுரா, பாகல்கோட், பீதர், கொப்பால், சித்ரதுர்கா, மாண்டியா, பத்ராவதி, தங்கவயல், சிக்கமகளூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.






      Dinamalar
      Follow us