/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர பகிரங்க அழைப்பு
/
ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர பகிரங்க அழைப்பு
ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர பகிரங்க அழைப்பு
ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர பகிரங்க அழைப்பு
ADDED : மார் 24, 2025 05:08 AM
ஷிவமொக்கா: ஷிவமொக்கா புராடலு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, ஷிவமொக்கா ரூரல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சாரதா பூர்யநாயக் ஆகியோர் கலந்து கொண்டார்.
இதில் மது பங்காரப்பா பேசியதாவது:
வாய்ப்புகள் கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் உள்ளது. எனவே, ம.ஜ.த., -எம்.எல்.ஏ., சாரதா பூர்யநாயக் காங்கிரசில் இணைய வேண்டும். காங்கிரசில் இணையுமாறு கூறி, தொகுதி மக்கள் அவரது வீட்டின் முன் நின்று போராடுங்கள்.தொகுதி மேம்பாட்டுக்காகவும், கோவில்கள் கட்டுவதற்கும் நிதி கேட்கப்படுகிறது. ஒரு கோவில் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதே போல, குழந்தகைளின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் பள்ளிகளை கட்டுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.