புதுமுகங்களுக்கு வாய்ப்பு சதீஷ் ஜார்கிஹோளி விருப்பம்
புதுமுகங்களுக்கு வாய்ப்பு சதீஷ் ஜார்கிஹோளி விருப்பம்
ADDED : ஜூலை 07, 2026 09:20 PM

பெங்களூரு: ''காங்கிரசில் ஒரு புதிய மாற்றம் தேவை. பல மாற்றங்கள் குறித்து, தலைவர் சிந்தித்து வருகிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்ன விவாதிக்கப்படுகிறது என்று பார்ப்போம்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். அது பற்றி விசாரிக்கட்டும். அனைவரும் வாக்காளர் பட்டியல் இடம் பெற வேண்டும்.
காங்கிரசில் ஒரு புதிய மாற்றம் தேவை. தலைவர் பல மாற்றங்கள் பற்றி சிந்தித்து வருகிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். என்ன விவாதிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.
அமைச்சரவையில், 20 அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. முதல்வர், விரைவில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, சதீஷ் ஜார்கிஹோளி உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அமைச்சரவை விரிவாக்க விவகாரம், நம் கையில் இல்லை; கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
