/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் ஆதரவாளர்கள் போன் ஒட்டுக்கேட்பு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
/
சிவகுமார் ஆதரவாளர்கள் போன் ஒட்டுக்கேட்பு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
சிவகுமார் ஆதரவாளர்கள் போன் ஒட்டுக்கேட்பு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
சிவகுமார் ஆதரவாளர்கள் போன் ஒட்டுக்கேட்பு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
ADDED : மார் 03, 2026 06:23 AM

பெங்களூரு: ''துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாக, யார் யார் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக, எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசியை, முதல்வர் சித்தராமையா ஒட்டுக்கேட்கிறார்,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசில், முதல்வர் நாற்காலிக்காக முட்டி மோதுகின்றனர். மாநிலத்தை முதல்வர் சித்தராமையா, கடன் சுழலில் தள்ளிவிட்டுள்ளார். இதுவரை ஆட்சி செய்த அனைத்து முதல்வர்கள் வாங்கிய கடன் தொகை அளவுக்கு, சித்தராமையா ஒருவரே வாங்கியுள்ளார். கடன் வாங்குவதில் கர்நாடக அரசு இரண்டாவது இடத்தில் உள்ளது.
துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாக, யார் யார் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள, எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசியை, முதல்வர் சித்தராமையா ஒட்டுக்கேட்கிறார். இதற்காகவே ஒரு எஸ்.பி.,யை நியமித்துள்ளார். அவரும் சிவகுமார் ஆதரவாளர்களை கண்காணிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் குமாரசாமி, மைசூரில் அளித்த பேட்டி:
அனைத்து ஆட்சிக் காலத்திலும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு இருந்தது. இதன் மூலம் சிலரின் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்து, பதவிகளை இழந்த உதாரணங்களும் உள்ளன. இப்போதும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடக்கிறது.
இது, சாதாரணமான விஷயமாகும். இந்த அரசில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு அதிகமாகவே உள்ளது. நான் உண்மையை கூறுகிறேன். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசியை, அமைச்சர்களே ஒட்டுக்கேட்பது இதுவே முதன் முறையாகும்.
அதேபோன்று, முதல்வர் பதவியில் அமர விரும்புபவரும் (சிவகுமார்) அரசின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கிறார். முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பவர், முதல்வர் பதவிக்காக போட்டி போடுபவர் என, இரண்டு கோஷ்டிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

