/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளியில் தலித் பெண் சமையல் செய்ய எதிர்ப்பு
/
பள்ளியில் தலித் பெண் சமையல் செய்ய எதிர்ப்பு
ADDED : ஜூன் 26, 2025 12:52 AM
சாம்ராஜ்நகர் : சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் ஜாதி வேற்றுமை, தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை.
பள்ளியில் மதிய உணவு சமைக்க, தலித் பெண்ணை நியமித்ததற்கு, கிராமத்தினர் ஆட்சேபனை தெரிவித்ததுடன், பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றும் சம்பவம் நடந்து வருகிறது.
சாம்ராஜ்நகரின், ஹொம்மா கிராமத்தில் துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு சமையல் செய்ய, தலித் சமுதாய பெண்ணை கல்வித்துறை நியமித்தது. இதனால் கிராமத்தின் உயர் சமுதாயத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.
தலித் பெண் தயாரித்த உணவை, தங்கள் பிள்ளைகள் சாப்பிட கூடாது என, தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை பெறுகின்றனர். வேறு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், 22 மாணவர்கள் இருந்தனர். இவர்களில் 12 பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்று, வேறு பள்ளிக்கு மாறியுள்ளனர். மற்றவர்களும் மாற்றுச் சான்றிதழை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவரும், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி மூடும் நிலைக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு ஆசிரியர்கள், சரியாக பாடம் நடத்தவில்லை என, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போது தலித் பெண்ணை நியமித்ததால் எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
இவ்வளவு விஷயங்கள் நடந்தும், கல்வித்துறை அதிகாரிகள் கண் மூடி அமர்ந்திருப்பது, சர்ச்சைக்கு காரணமாகிஉள்ளது.