/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாழ்க்கை வரலாறு படம் சாலுமரத திம்மக்கா எதிர்ப்பு
/
வாழ்க்கை வரலாறு படம் சாலுமரத திம்மக்கா எதிர்ப்பு
ADDED : ஜூன் 17, 2025 08:04 AM

பெங்களூரு : ஒரட்டா ஸ்ரீ இயக்கும், 'விருக்ஷ மாதே' என்ற திரைப்பட படப்பிடிப்பு, சமீபத்தில் துவங்கியது. திலீப்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். சாலுமரத திம்மக்காவின் வாழ்க்கையை, மையமாக கொண்டதாகும்.
நெல்லிகட்டே சித்தேஷ் எழுதிய புத்தகம், திரைப்படமாகிறது. இதற்கு சாலுமரத திம்மக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்கும்படி, மாநில திரைப்பட வர்த்தக சபையில், நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து, அவரது வளர்ப்பு மகன் உமேஷ் அளித்த பேட்டி:
ஒரு மாதத்துக்கு முன்பு, திலீப் குமார் மற்றும் இயக்குநர் ஒரட்டா ஸ்ரீ,எங்கள் வீட்டுக்கு வந்தனர். சாலுமரத திம்மக்காவின் வாழ்க்கையை மையமாக கொண்ட திரைப்படம் தயாரிப்பதாக கூறினர். நாங்கள் அனுமதி அளிக்கவில்லை.
இதற்கு முன்னும், பல இயக்குநர்கள் படம் தயாரிக்க அனுமதி கேட்டனர். நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். பணம் கொடுப்பதாக கூறியும், நாங்கள் சம்மதிக்கவில்லை. சாலுமரத திம்மக்காவின் வாழ்க்கை சரித்திரமாக வேண்டும். தகுதியான நடிகர், நடிகையர் இல்லாமல் படத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றோம்.
நெல்லிகட்டே சித்தேஷ், சாலுமரத திம்மக்காவை பற்றிய கதை எழுதியுள்ளார். இது பொய்யான கட்டுக்கதை. இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கும்படி கோரினோம். இந்த புத்தகத்தை மையமாக கொண்டு படம் தயாரிக்கின்றனர்.எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.