/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அப்பாவி மக்களை கொன்றதற்கு பாக்., விலை கொடுக்க வேண்டும்'
/
'அப்பாவி மக்களை கொன்றதற்கு பாக்., விலை கொடுக்க வேண்டும்'
'அப்பாவி மக்களை கொன்றதற்கு பாக்., விலை கொடுக்க வேண்டும்'
'அப்பாவி மக்களை கொன்றதற்கு பாக்., விலை கொடுக்க வேண்டும்'
ADDED : ஏப் 24, 2025 07:18 AM

யாத்கிர்: “காஷ்மீரில் அப்பாவி மக்களை கொன்றதற்கு, பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டும்,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.
மாநில அரசுக்கு எதிராக பா.ஜ., நடத்தும், 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' யாத்கிரில் நேற்று நடந்தது. பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்களை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று இருப்பது வேதனை அளிக்கிறது. காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை அவமதித்து, வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்த 370 சட்டப்பிரிவை பா.ஜ., அரசு ரத்து செய்தது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கேள்விப்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார்.
அப்பாவி மக்களை கொன்றதற்கு, பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆக வேண்டும். நம் பிரதமர் துணிச்சலான நடவடிக்கை எடுப்பார்.
காங்கிரஸ் ஐந்து வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆறாவது வாக்குறுதியும் உள்ளது. அது விலைவாசியை உயர்த்துவது. ஆட்சிக்கு வந்த பின் அத்தியாவசியமான 50 பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கின்றனர். சாமானியர்கள், விவசாயிகள் வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக உள்ளது.
டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியது இவர்கள் தான். ஆனால் மத்திய அரசு மீது பழி போடுகின்றனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.
தற்போது தங்கள் பங்கை மாநில அரசு கொடுப்பது இல்லை. ஜாதிகள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியால் மேம்பாட்டுப் பணிகள் ஜீரோவாக உள்ளது.
இவ்வாறு பேசினார்.

