தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மணமகள் திடீர் மாயம் கலக்கத்தில் பெற்றோர்

மணமகள் திடீர் மாயம் கலக்கத்தில் பெற்றோர்

மணமகள் திடீர் மாயம் கலக்கத்தில் பெற்றோர்


ADDED : ஏப் 21, 2025 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் போளார் கிராமத்தில் வசிப்பவர் பல்லவி, 22. இவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மணமகள், மணமகனின் குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்திருந்தனர்.

திருமணத்துக்கு முந்தைய நாள் மதியம், மெஹந்தி போட்டு வருவதாக கூறி மணமகள் பல்லவி, பியூட்டி பார்லருக்கு சென்றார். அதன்பின் அவர் காணாமல் போனார். கலக்கமடைந்த பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது.

மணமகள் காணாமல் போனதால், திருமணமும் நின்றுவிட்டது. தங்கள் மகளை காணவில்லை என, மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்தனர். போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.

பல்லவி திருமணத்துக்கு முழு மனதுடன் சம்மதித்திருந்தார். இவரது ஒப்புதலை உறுதி செய்த பின்னரே, பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். அனைத்து சாஸ்திர, சடங்குகளிலும் மணமகள் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.

வருங்கால கணவருடன், போட்டோ ஷூட், மெஹந்தி விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் மிக சிறப்பாக நடந்துள்ளன. மணமகனை பிடித்திருந்த நிலையில், பல்லவி காணாமல் போனது சந்தேகங்களை எழுப்புகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us