/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் இன்று ஐ.பி.எல்., போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
/
பெங்களூரில் இன்று ஐ.பி.எல்., போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
பெங்களூரில் இன்று ஐ.பி.எல்., போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
பெங்களூரில் இன்று ஐ.பி.எல்., போட்டி மைதானத்தை சுற்றி வாகனம் நிறுத்த தடை
ADDED : ஏப் 24, 2025 07:09 AM
பெங்களூரு: பெங்களூரில் இன்று ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு சின்னசாமி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில், வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
எம்.ஜி.சாலை
மைதானத்தை சுற்றி போக்குவரத்து சுமுகமாக இருக்கும் வகையில், போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில், வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
குயின்ஸ் சாலையின் பாலேகுந்த்ரி சதுக்கம் - குயின்ஸ் சதுக்கம்; எம்.ஜி.சாலையின் அனில் கும்ப்ளே சதுக்கம் - குயின்ஸ் சதுக்கம்; இணைப்பு சாலையின் எம்.ஜி.சாலை - கப்பன் சாலை; ராஜ்பவன் சாலையின் டி.சவுடய்யா சாலை - ரேஸ்கோர்ஸ் சாலை; கப்பன் சாலையின் சி.டி.ஒ., சதுக்கம் - டிக்கென்சன் சாலை; செயின்ட் மார்க்ஸ் சாலையின் கேஸ் பார்மசி - அனில் கும்ப்ளே சதுக்கம்.
மியூசியம் சாலையின் எம்.ஜி.சாலை - ஆசிர்வாதம் சதுக்கம்; கஸ்துாரிபா சாலையின் குயின்ஸ் சதுக்கம் - ஹட்சன் சதுக்கம் - சித்தலிங்கா சதுக்கம் - ஆர்.ஆர்.எம்.ஆர்., சதுக்கம்; லேவெலி சாலையின் குயின்ஸ் சதுக்கம் - மல்லையா சாலை; விட்டல் மல்லையா சாலையின் சித்தலிங்கய்யா சதுக்கம் - பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி ஆகிய சாலைகளில் இருபக்கமும், வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பன் பார்க், கிங்ஸ் சாலை, பிரஸ் கிளப், பாலபவன் சாலையிலும் வாகனங்களை நிறுத்த கூடாது.
பார்க்கிங்
கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்கள் செயின்ட் ஜோசப் இந்தியன் பள்ளி மைதானம்; யு.பி.சிட்டி பார்க்கிங்; சிவாஜிநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தின் முதல் தளம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
மைதானத்தில் பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார், ஊழியர்கள் வாகனங்களை பழைய கே.ஜி.ஐ.டி., வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.
கிரிக்கெட் பார்க்க வருபவர்களுக்கு வசதியாக பி.எம்.டி.சி., - மெட்ரோ ரயில் சேவையும் உள்ளது.
கப்பன் சாலையில் இருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் வர, வெளியேற நுழைவுவாயில் 1 முதல் 6; இணைப்பு சாலையில் இருந்து வருபவர்கள் நுழைவுவாயில் 7 முதல் 11; குயின்ஸ் சாலையில் இருந்து வருபவர்கள் நுழைவுவாயில் 12 முதல் 21ஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

