/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விடுதி மாணவியருக்கு ஹோட்டலில் பார்ட்டி: வார்டனுக்கு 'நோட்டீஸ்'
/
விடுதி மாணவியருக்கு ஹோட்டலில் பார்ட்டி: வார்டனுக்கு 'நோட்டீஸ்'
விடுதி மாணவியருக்கு ஹோட்டலில் பார்ட்டி: வார்டனுக்கு 'நோட்டீஸ்'
விடுதி மாணவியருக்கு ஹோட்டலில் பார்ட்டி: வார்டனுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 09, 2025 04:45 AM
விஜயபுரா: மாணவியரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, ஜாலியாக பிறந்த நாளை கொண்டாடிய அரசு மாணவியர் விடுதி வார்டன் மற்றும் சமையல் ஊழியருக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விஜயபுரா நகரின், ராஜ்குமார் லே - அவுட்டில், சமூக நலத்துறைக்கு சொந்தமான மாணவியர் விடுதி உள்ளது.
இதில் சகுந்தலா ரஜ்பூத், வார்டனாக பணியாற்றுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இவருக்கு பிறந்த நாள் வந்தது.
அன்றைய தினம் விடுதி மாணவியரை, ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பார்ட்டி கொடுத்தார். மாணவியரை விடுதியில் இருந்து, வெளியே அழைத்துச் செல்ல, அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இது விதிமீறல்.
இதையறிந்த சமூக நலத்துறை துணை இயக்குநர், விடுதி வார்டன் சகுந்தலா ரஜ்பூத், சமையல் ஊழியர் ரிஜ்வான் முல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளார்.