/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக பா.ஜ., தலைவராக 2 ஆண்டு விஜயேந்திராவுக்கு கட்சியினர் கவுரவம்
/
கர்நாடக பா.ஜ., தலைவராக 2 ஆண்டு விஜயேந்திராவுக்கு கட்சியினர் கவுரவம்
கர்நாடக பா.ஜ., தலைவராக 2 ஆண்டு விஜயேந்திராவுக்கு கட்சியினர் கவுரவம்
கர்நாடக பா.ஜ., தலைவராக 2 ஆண்டு விஜயேந்திராவுக்கு கட்சியினர் கவுரவம்
ADDED : நவ 15, 2025 11:08 PM

பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விஜயேந்திராவை கட்சியின் மூத்த தலைவர்கள் கவுரவித்தனர்.
கர்நாடக பா.ஜ., தலைவராக 2023 நவம்பர் 15ம் தேதி, விஜயேந்திரா பதவி ஏற்றார். நேற்றுடன் அவர் பதவிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றது. பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவரை மூத்த தலைவர்கள் கவுரவித்தனர்.
அப்போது, விஜயேந்திரா தலைமையில் நடத்தப்பட்ட 'முடா' பாதயாத்திரை, வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல் தொடர்பான போராட்டம் உட்பட அரசுக்கு எதிராக நடத்திய பல போராட்டங்கள் குறித்து மூத்த தலைவர்கள் பேசினர்.
இந்நிகழ்ச்சிக்கு பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:
துங்கபத்ரா அணையில் இருந்து, இரண்டாம் பாசனத்திற்கு அரசு தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறக்க முடியாவிட்டால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.
கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி குறித்த குழப்பத்தை, கட்சி மேலிடம் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன். மக்கள் ராஜ்யம் நடக்க வேண்டும் என, பீஹார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து உள்ளனர்.
ராகுல் காந்தி கால் வைக்கும் இடங்களில், அவரது கட்சி அழிகிறது. சரியான தகவல் இல்லாமல், ஓட்டுத் திருட்டு நடக்கிறது என்று கூறுகிறார். அவரது பொய்க்கு, பீஹார் மக்கள் பதிலடி கொடுத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

