தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஸ் டிக்கெட்டுக்கு ரூ.6க்கு பதிலாக ரூ.60,000 செலுத்திய பயணி அவதி

 பஸ் டிக்கெட்டுக்கு ரூ.6க்கு பதிலாக ரூ.60,000 செலுத்திய பயணி அவதி

 பஸ் டிக்கெட்டுக்கு ரூ.6க்கு பதிலாக ரூ.60,000 செலுத்திய பயணி அவதி


ADDED : ஜன 23, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்த ஒருவர், டிக்கெட் கட்டணத்துக்கு ஆறு ரூபாய்க்கு பதிலாக, 60,000 ரூபாய் செலுத்திவிட்டு அவதிப்படுகிறார்.

ஜனவரி 14ம் தேதி, பயணி ஒருவர் பெங்களூரின் பனசங்கரியில் இருந்து, கதிரேனஹள்ளிக்கு பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்தார். டிக்கெட் கட்டணமாக, ஆறு ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது அவர் போன் பே மூலமாக பணம் செலுத்தினார். ஆனால் தவறுதலாக, ஆறு ரூபாய்க்கு பதிலாக 60,000 ரூபாயை செலுத்தி விட்டார்.

தவறை உணர்ந்து, அதிர்ச்சி அடைந்த பயணி, நடத்துநரிடம் கூறினார். பணத்தை தனக்கு பரிமாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். நடத்துநரும் கணக்கில் பார்த்த போது, 62,316 ரூபாய் வந்திருப்பது தெரிந்தது.

ஆனால், அந்த பணத்தை உடனடியாக பரிமாற்றம் செய்ய முடியாது என கூறி மேலதிகாரிகளிடம் நடந்த விஷயத்தை விவரித்தார். அதிகாரிகளும், 'யு.பி.ஐ., கணக்கை முழுமையாக, ஆய்வு செய்ய வேண்டும். டிப்போவுக்கு வாருங்கள்' என, கூறினர்.

அதன்படி பயணி பி.எம்.டி.சி., டிப்போவுக்கு சென்றார். 'சில நடைமுறைகள் உள்ளன. இதை செய்து முடித்த பின், பணம் திரும்ப கிடைக்கும்' என, அதிகாரி கூறி அனுப்பிவிட்டார். ஆனால், இதுவரை பணம் திரும்ப கிடைக்காமல், பயணி பரிதவிக்கிறார்.

பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது அனைத்து தேவைகளுக்கும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகின்றனர். எந்த பொருட்கள் வாங்கினாலும், பணமாக கொடுக்காமல், போன் பே, கூகுள் பே மூலமாக பணம் செலுத்துவோரே அதிகம். இதுபோன்று பணம் செலுத்தும் போது, அதிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பணத்தை இழக்க நேரிடும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது, பல முறை சரி பார்ப்பது அவசியம் என்பதை, பி.எம்.டி.சி.,யில் நடந்த சம்பவம் உணர்த்துகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us