/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேக்கரி தொழில் மூலம் 10 பேருக்கு வேலை அளித்த பவித்ரா
/
பேக்கரி தொழில் மூலம் 10 பேருக்கு வேலை அளித்த பவித்ரா
பேக்கரி தொழில் மூலம் 10 பேருக்கு வேலை அளித்த பவித்ரா
பேக்கரி தொழில் மூலம் 10 பேருக்கு வேலை அளித்த பவித்ரா
ADDED : நவ 10, 2025 04:18 AM

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறையிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக வீட்டில் இருந்தே சுயதொழில் செய்து லாபம் ஈட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் ஒருவர் தட்சிண கன்னடாவின் புத்துார் தாலுகா கோடிம்பாடியை சேர்ந்த பவித்ரா, 28. பேக்கரி தொழில் மூலம் 10 பெண்களுக்கு வேலை கொடுத்து, பவித்ரா தொழில் முனைவோராக மாறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், கோடிம்பாடி கிராமத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரா சஞ்சீவினி சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். இச்சங்கத்தின் மூலம் மத்திய அரசின் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் 75,000 ரூபாய் கடன் வாங்கி, சிறிதாக பேக்கரி துவக்கினேன்.
பேக்கரியில் இனிப்பு, காரத்தை தயாரிக்க சொந்தமான நானே இயந்திரம் வாங்கினேன். வீட்டில் இருந்தே இனிப்பு, காரம் தயாரித்தோம். எனது கணவர் சேகரும் ஆதரவாக இருந்தார். தற்போது புத்துார் ரயில் நிலையம் அருகே பேக்கரி நடத்துகிறோம்.
சுள்ளியா, கடபா, பெல்தங்கடியில் உள்ள பேக்கரி கடைகளுக்கும், வீட்டில் தயாரிக்கும் இனிப்பு, காரத்தை விற்பனை செய்கிறோம். தற்போது இனிப்பு, காரம் தயாரிக்கும் இடத்தில் பத்து பெண்களுக்கு வேலை அளித்து உள்ளேன்.
மேலும் 5 பேக்கரிகள் திறந்து, நிறைய பெண்களுக்கு வேலை அளிக்கவும் முடிவு செய்து உள்ளேன். பெண்கள் பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டும் என்பது எனது ஆசை. பெண் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

