/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இன்ஜினியர்கள் சிறப்பாக பணி செய்தால் மக்கள் பாராட்டுவர்'
/
'இன்ஜினியர்கள் சிறப்பாக பணி செய்தால் மக்கள் பாராட்டுவர்'
'இன்ஜினியர்கள் சிறப்பாக பணி செய்தால் மக்கள் பாராட்டுவர்'
'இன்ஜினியர்கள் சிறப்பாக பணி செய்தால் மக்கள் பாராட்டுவர்'
ADDED : செப் 16, 2025 05:18 AM

பெங்களூரு: ''இன்ஜினியர்கள் சிறப்பாக வேலை செய்தால், மக்களிடம் இருந்து தானாக பாராட்டு கிடைக்கும்,'' என, கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் கூறினார்.
கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை அலுவலகத்தில், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய, கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை இன்ஜினியர்கள் லோகேஷ், விஜய்குமார் ஹரிதாஸ், ரங்கநாத், நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதல் இயக்குநர் கிரிஷ், இன்ஜினியர்கள் சுதாகர், பாலாஜி, நித்யா, ரவிகுமார், உதவி இன்ஜினியர்கள் திப்பேஷ், பர்சானா, ரேகா, மஞ்சேகவுடா, ராகேஷ் யாதவ் ஆகிய 13 பேருக்கு, 'விஸ்வேஸ்வரய்யா விருது' வழங்கி, கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் கவுரவித்தார்.
பின், அவர் பேசிய தாவது:
செய்யும் தொழில் தான் நமக்கு தெய்வம். நம் பணிகள் மீது நிறைய பேர் குறை சொல்லலாம். எதை பற்றியும் கவலைப்படாமல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அழுத்தத்தின் கீழும் இன்ஜினியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்
நீங்கள் சிறப்பாக வேலை செய்தால், மக்களிடம் இருந்து தானாக பாராட்டு கிடைக்கும். நாம் அனைவரும் இணைந்து பெங்களூரை சிறந்த நகரமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலர் மஞ்சுநாத் பிரசாத் பேசிய தாவது:
கடந்த 2016ல் நான் மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, பொம்மனஹள்ளி பகுதி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தேங்கி இருந்த மழைநீரை அகற்ற இன்ஜினியர்கள் இரவு, பகலாக வேலை செய்தனர்.
தன் 13 வயதில் தந்தையை இழந்த போதிலும், தன் கல்வியை யாருக்காகவும் விட்டுத் தராமல் சிறந்த இன்ஜினியராக விஸ்வேஸ்வரய்யா உருவெடுத்தார்.
எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு, அனைவருடனும் விவாதித்தார். அவரை போன்று நீங்களும் சிறந்த இன்ஜினியர் களாக மாற வேண்டும். அவரது கொள்கைகளை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.