/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜோக் நீர்வீழ்ச்சிக்கு மே 1 முதல் அனுமதி
/
ஜோக் நீர்வீழ்ச்சிக்கு மே 1 முதல் அனுமதி
ADDED : ஏப் 25, 2025 05:43 AM

ஷிவமொக்கா: சுற்றுலா பயணியருக்கு மகிழ்ச்சியான தகவலை, சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி முதல் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம், நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ஜோக் நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதாலும்; நீர்வீழ்ச்சியின் நுழைவு பகுதியில், மேம்பாட்டு பணிகள் நடந்ததாலும் ஏப்ரல் 30ம் தேதி வரை, சுற்றுலா பயணியர், பொது மக்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறியாத சுற்றுலா பயணியர், அங்கு வந்தனர். நீர்வீழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். விரைவில் பணிகளை முடித்து, நீர்வீழ்ச்சியை பார்க்க வாய்ப்பளிக்கும்படி, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
தற்போது பணிகள் முடிந்துள்ளதால், மே 1ம் தேதி முதல் ஜோக் நீர்வீழ்ச்சி திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணியர் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என, ஜோக் நிர்வகிப்பு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.