தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேம்பாலங்களில் 'டூவீலர்'களுக்கு தடை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

 மேம்பாலங்களில் 'டூவீலர்'களுக்கு தடை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

 மேம்பாலங்களில் 'டூவீலர்'களுக்கு தடை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு


ADDED : செப் 08, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு நகரின் முக்கிய மேம்பாலங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்ததற்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு போக்குவரத்து போலீஸ் துறை, சாலை பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. பொது மக்களின் போக்குவரத்து சீராக இயங்கவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், சில மேம்பாலங்களில் நிகழும் விபத்துகள் குறித்து ஆய்வு செய்தது.

எலக்ட்ரானிக் சிட்டி அதன்படி, மைசூரு சாலை பி.ஜி.பி., மேம்பாலம்; சில்க்போர்டு முதல் ராகிகுட்டா வரையிலான டபுள் டக்கர் மேம்பாலம்; பீன்யா மேம்பாலம்; சஞ்சீவ் நகர் கிராசில் இருந்து வித்யாசில்பா சந்திப்பு வரையிலான சர்வதேச விமான நிலைய மேம்பாலம்; எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதுபோன்று சஞ்சீவ் நகர் கிராசில் இருந்து வித்யாசில்பா சந்திப்பு வரையிலான சர்வதேச விமான நிலைய மேம்பாலம், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்கள் ஓட்ட முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரை சேர்ந்த கவுரவ் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம், சஞ்சீவ் நகர் கிராசில் இருந்து வித்யாசில்பா சந்திப்பு வரையிலான சர்வதேச விமான நிலைய மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

24 மணி நேரம் இவ்விரு மேம்பாலங்களிலும், அனைத்து வகையான வாகன ஓட்டிகள், அவர்களின் அலுவலகங்கள், கல்லுாரிகள், பிற அன்றாட இடங்களுக்கு விரைந்து செல்ல உதவியாக இருக்கிறது. இத்தகைய மேம்பாலத்தில், 24 மணி நேரமும் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த மேம்பாலங்களில் இரு சக்கர வாகனங்கள் இயக்க தடை விதிப்பதால், அலுவலகங்களுக்கு செல்ல நீண்ட நேரமாவதுடன், பெட்ரோல் செலவு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது அதிகரிக்கும்.

போக்குவரத்தை நிர்வகிக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசிற்கு இருக்கும் அதிகாரத்தை, இந்த பொதுநல வழக்கு மறுக்கவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட வகை வாகனங்கள் மீது 24 மணி நேரமும் முழுமையான தடை விதிப்பது பொருத்தமற்றது.

கடுமையான வேக சோதனைகள், சிறந்த வழித்தட ஒழுக்கம், விதிகள் மீறுவோருக்கு அபராத கட்டணம் உயர்த்துவது அல்லது குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை முதலில் பரிசீலித்திருக்க வேண்டும்.

எனவே, போக்குவரத்து போலீஸ் துறையின் மேம்பாலங்களில் இரு சக்கர பயணத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us