/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொள்கை அரசியலில் பிளஸ்.. . தேர்தலில் மைனஸ்! உள்ளாட்சி தேர்தலில் தேவகவுடாவின் மனக்கணக்கு
/
கொள்கை அரசியலில் பிளஸ்.. . தேர்தலில் மைனஸ்! உள்ளாட்சி தேர்தலில் தேவகவுடாவின் மனக்கணக்கு
கொள்கை அரசியலில் பிளஸ்.. . தேர்தலில் மைனஸ்! உள்ளாட்சி தேர்தலில் தேவகவுடாவின் மனக்கணக்கு
கொள்கை அரசியலில் பிளஸ்.. . தேர்தலில் மைனஸ்! உள்ளாட்சி தேர்தலில் தேவகவுடாவின் மனக்கணக்கு
ADDED : டிச 31, 2025 07:27 AM
- நமது நிருபர் -
கர்நாடகாவில், 1999ல் ம.ஜ.த., என்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னாள் பிரதமர் தேவகவுடா துவக்கினார். சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றி, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து, கர்நாடகாவில் இரு முறை ம.ஜ.த., ஆட்சியையும் பிடித்தது. இதெல்லாம் பழைய கதை என்று சொல்லி விட்டு, கடந்து போக முடியாது. ஏனெனில், சந்தர்ப்பவாத அரசியலை சரியாக செய்து முடிப்பவர் தேவகவுடா.
தற்போது, ம.ஜ.த., தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியில் இருந்தபடியே, 2023 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என, இரு தேர்தல்களையும் சந்தித்தது.
இதனால், தேவகவுடா மகன் குமாரசாமிக்கு மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்படுவோம் என்று, அவ்வப்போது தந்தையும், மகனும் கூறி வருகின்றனர்.
இப்போது திடீரென, தனது வாய்சை மாற்றி, 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி' என, தேவகவுடா அறிவித்து உள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
அரசியல் சதுரங்கம் இந்த அறிவிப்புக்கு பின், ஒளிந்திருக்கும் அரசியல் என்ன என்பதை பலரும் உற்று நோக்குகின்றனர். உள்ளாட்சி தேர்தலில், ம.ஜ.த., தனித்து போட்டி என்பது திடீர் முடிவா அல்லது தேவகவுடாவின் நீண்ட கால அரசியல் சதுரங்க விளையாட்டின் அசாத்திய நகர்வா என்றும் அலசப்படுகிறது.
கர்நாடகாவில் இன்றைய நிலவரப்படி ம.ஜ.த., சிறிய மாநில கட்சி மட்டுமே. வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால், 20 தொகுதிகளுக்கு மேல் வெல்வது கடினமே. அப்படி இருக்கையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவிப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இன்றைக்கும் ம.ஜ.த., பழைய மைசூரு, ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
அதற்கு காரணம், இந்த பகுதிகளில் வசிக்கும் ஒக்கலிகர் சமுதாய மக்கள் தான். கர்நாடகாவின் ஆட்சி கட்டிலில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களான ஒக்கலிகர் சமுதாய ஓட்டுகளை, ம.ஜ.த., தன் பக்கம் வைத்திருக்கிறது.
இதனாலே, ம.ஜ.த., தலைவர்கள் தங்களின் அரசியல் சுற்றுப்பயணம் என எதுவாக இருந்தாலும், முதலில் இந்த மூன்று மாவட்டங்களுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இவர்களை குஷிப்படுத்தவே, குமாரசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களை இப்பகுதிகளில் அமைக்க முயற்சித்து வருகிறார். உதாரணமாக, மாண்டியா, மைசூரு பகுதியில் ஐ.ஐ.டி., வளாகம் அமைக்க மத்திய அரசிடம் கோரி உள்ளார்.
ஹாசனில் பெரிய தொழிற்சாலை அமைப்பதற்கு முனைப்பு காட்டுகிறார்.
பலம் வாய்ந்த தொகுதிகளில் தனியாக நின்றால், ஒக்கலிகர் ஓட்டு வங்கியை பயன்படுத்தி, ம.ஜ.த., பழைய மைசூரு பகுதியில் சுலபமாக வென்று விடும். எதற்காக பா.ஜ.,வை தோளில் துாக்கி சுமக்க வேண்டும் என, தனக்கு தானே கேட்டு கொண்டுள்ளது. தன் கோட்டைக்குள் வேறு கட்சியின் அரசியல் கொடி பறப்பதை எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. இதன் மூலம், 'என் கட்சியின் ஓட்டு வங்கியை பா.ஜ.,விடம் ஒப்படைக்க மாட்டேன். என் கட்சி இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது' என்பதை காட்டவே தேவகவுடா தனித்து போட்டி என்பதை ஆணித்தனமாக அறிவித்து விட்டார்.
இது, பா.ஜ.,வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ.,வினர் புலம்பல் சட்டசபை, லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து, ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். தேவகவுடா தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து விட்டார். பேரனை அடுத்த அரசியல் தலைவராக உருவாக்குகிறார். பா.ஜ., உடன் கூட்டணி வைத்தால், அமலாக்கத்துறை தொல்லை இல்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும் வழக்குகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. நம் தோள் மீதே சவாரி செய்து விட்டு, நமக்கு ஆப்பு அடிக்கிறார் தேவகவுடா.
இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, கொள்கை அரசியலில் சமரசம் செய்தாலும், தேர்தல் அரசியலில் சமரசமே இல்லை என்பதில் தேவகவுடா தெளிவாக தான் இருக்கிறார். இதனாலே, அவரை அரசியல் விபரம் தெரிந்தவர்கள் 'மாஸ்டர் மைண்ட்' தேவகவுடா என அழைக்கின்றனர்.
மாபெரும் மாநாடு மாநிலம் முழுதும் ம.ஜ.த., வலுப்பெற்று வருகிறது. மற்ற மாநிலங்களிலும் வளர்கிறது. ஜனவரி, 24 அன்று ம.ஜ.த.,வின் மாபெரும் மாநாடு நடக்கிறது. இதில், 2 லட்சம் பேர் பங்கேற்பர். மாநாட்டிற்கான ஏற்பாட்டை குமாரசாமி செய்வார். போராடுவதற்கான பலம் என் கால்களில் இல்லை. ஆனால், போராடுவதற்கான பலம் மூளையில் உள்ளது. என் வாழ்க்கையில் ஒரு போதும் பொய் சொன்னதில்லை. --தேவகவுடா, ம.ஜ.த., தேசிய தலைவர்

