/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி 'ரேவ் பார்ட்டி' 35 பெண்கள் உட்பட 150 பேரை துாக்கிய போலீஸ்
/
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி 'ரேவ் பார்ட்டி' 35 பெண்கள் உட்பட 150 பேரை துாக்கிய போலீஸ்
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி 'ரேவ் பார்ட்டி' 35 பெண்கள் உட்பட 150 பேரை துாக்கிய போலீஸ்
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி 'ரேவ் பார்ட்டி' 35 பெண்கள் உட்பட 150 பேரை துாக்கிய போலீஸ்
ADDED : நவ 01, 2025 11:22 PM

ககலிபுரா: பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி 'ரேவ் பார்ட்ட ி ' நடந்தது. இதில் பங்கேற்ற 35 இளம்பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் நள்ளிரவு 1:00 மணி வரை பப், சொகுசு விடுதிகளில் பார்ட்டி நடத்த அனுமதி உள்ளது. இந்நேரத்தை மீறி பார்ட்டி நடத்துவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு தெற்கு மாவட்டம், ககலிபுராவின் தேவிகெரே கிராஸ் பகுதியில் உள்ள தசாக்சகெரேயில், சுஹாஸ் கவுடா என்பவருக்கு சொந்தமான 'அயனா' என்ற பெயரில் இயங்கும் 'ஹோம் ஸ்டே'யில் நேற்று அதிகாலை 2:00 மணி வரை, லேசர் விளக்குகளை ஜொலிக்கவிட்டு, டி.ஜே.பாடல் சத்தத்தில் நடனமாடும் ரேவ் பார்ட்டி நடந்தது.
போதைப்பொருள் இதுபற்றி எஸ்.பி., சீனிவாஸ் கவுடாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ககலிபுரா போலீசார், 'ஹோம் ஸ்டே'க்கு சென்றனர். அங்கு நடனமாடிக் கொண்டிருந்த 35 இளம்பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட 150 பேரை கைது செய்தனர். 'ஹோம் ஸ்டே'யில் நடத்திய சோதனையில், போதைப் பொருட்களும் சிக்கின.
பார்ட்டியில் கலந்து கொண்டோர் யாராவது போதைப் பொருள் பயன்படுத்தி உள்ளனரா என்பதை கண்டறிய, ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
'வாட்ஸாப்' மருத்துவ பரிசோதனைக்கு பின், அனைவரின் முகவரியையும் போலீசார் பெற்றுக் கொண்டனர். பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று மாலை அளித்த பேட்டி:
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி நடந்த, ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்ட 35 இளம்பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
'ஹோம் ஸ்டே'யில் போதைப் பொருட்கள் சிக்கி உள்ளன. கைதானவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்துள்ளோம். யாராவது போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தால் அவர்கள் கைது செய்யப்படுவர்.
கைதானவர்கள் முகவரியை சேகரித்து வைத்துள்ளோம். அனைவரும் பெங்களூரு நகரின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள். எல்லாருக்கும் 19 முதல் 23 வயது இருக்கும். 'ஜெனரல் ஜீ' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழுவில் 'ரேவ் பார்ட்டி' நடப்பது குறித்து பதிவிடப்பட்டது.
இந்த பதிவை பார்த்து பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறியதாக, பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. 'ஹோம் ஸ்டே' சட்டவிரோதமாக நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி யும் விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

