தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜமீர் பேசியதாக கூறப்படும் ஆடியோ போலீசார் விசாரணை துவக்கம்

 ஜமீர் பேசியதாக கூறப்படும் ஆடியோ போலீசார் விசாரணை துவக்கம்

 ஜமீர் பேசியதாக கூறப்படும் ஆடியோ போலீசார் விசாரணை துவக்கம்


ADDED : ஜூன் 07, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமது கான் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமது கான். இவர், கட்சி பிரமுகர் முகமது சிராஜ் என்பவரிடம் பேசியதாக கூறப்படும் மொபைல் போன் உரையாடல் ஆடியோ கடந்த மாத இறுதியில் வெளியானது.

'தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை தோல்வி அடைய செய்ய வேண்டும்; எஸ்.டி.பி.ஐ., கட்சியின் அப்சர் கோட்லியை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்று கூறியது அந்த ஆடியோவில் இருந்தது. ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை; ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தி நான் பேசுவது போல ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என்று ஜமீர் விளக்கம் அளித்தார்.

போலி ஆடியோவை பரப்பியதாக முகமது சிராஜும், தாவணகெரே சைபர் கிரைம் போலீசில் கடந்த 1ம் தேதி புகார் செய்தார். இந்த புகார் மீது போலீசார் 7 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். விசாரணைக்கு ஆஜராக முகமது சிராஜுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜமீரும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த ஆடியோ வெளியானதால் சிவகுமார் அமைச்சரவையில் ஜமீர் பெயர் இல்லாமல் போனது. 2 வது பட்டியலிலும் அவர் பெயர் இருக்குமா என சந்தேகமாக உள்ளது. ஜமீருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில் ஹாசனில் உள்ள கோடி மடத்தின் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமி நேற்று கூறுகையில், ''ஆடியோ வெளியான விவகாரத்தில் ஜமீர் மீது எந்த தவறும் இல்லை. வேண்டுமென்றே சிலர் வெளியிட்டுள்ளனர். ஜமீர் கண்டிப்பாக அமைச்சர் ஆவார். அவர் அமைச்சராக இல்லாவிட்டால் அமைச்சரவை நிறைவு பெறாது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us