பள்ளி, கல்லுாரி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
பள்ளி, கல்லுாரி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
ADDED : ஆக 30, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவா என, போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து, வடக்கு மண்டல டி.சி.பி., நேமே கவுடா, நேற்று அளித்த பேட்டி:
பள்ளி, கல்லுாரிகளின் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக, பொதுமக்களிடம் இருந்து, எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே, வடக்கு மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி அருகில், திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்தோம்.
போதைப்பொருள் ஏதும் தென்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
