/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்று பெண்களால் விவசாயி பலி நடவடிக்கை எடுக்காத போலீசார்
/
மூன்று பெண்களால் விவசாயி பலி நடவடிக்கை எடுக்காத போலீசார்
மூன்று பெண்களால் விவசாயி பலி நடவடிக்கை எடுக்காத போலீசார்
மூன்று பெண்களால் விவசாயி பலி நடவடிக்கை எடுக்காத போலீசார்
ADDED : மே 18, 2025 11:12 PM

சாம்ராஜ்நகர்: நிலத்தில் பசுவை மேயவிட வேண்டாம் என, கூறியதால் மூன்று பெண்களால் தாக்கப்பட்ட விவசாயியின் கால் எலும்பு முறிந்தது. அறுவை சிகிச்சை செய்யும் போது, மாரடைப்பால் இறந்தார்.
சாம்ராஜ்நகர் தாலுகாவின், கொடிகானே வசித்தவர் விவசாயி சென்ன பசவய்யா, 70. இவரது நிலத்தில் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நாகரத்னா. இவர் தன் பசுக்களை, சென்ன பசவய்யா நிலத்தில் மேய விடுவது வழக்கம். இதை கண்டித்தும் பயன் இல்லை.
ஏப்ரல் 22ம் தேதி, நாகரத்னா பசுக்களை, சென்ன பசவய்யாவின் நிலத்தில் மேய விட்டிருந்தார். இதை பார்த்த அவர், நிலத்தில் பசுவை மேயவிட வேண்டாம்; அங்கிருந்து அழைத்து செல்லும்படி திட்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அப்போது கோப மடைந்த நாகரத்னா, அவரது குடும்பத்தின் சுஹாசினி, ரோஹிணி ஆகியோர், சென்ன பசவய்யா கையில் வைத் திருந்த ஊன்றுகோலை பறித்து, அவரது காலில் பலமாக தாக்கினர். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. குடும்பத்தினர் அவரை சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏப்ரல் 26ம் தேதி, அவருக்கு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சம்பவம் நடந்து ஒரு மாதம் நெருங்கியும், முதியவரின் இறப்புக்கு காரணமான மூன்று பெண்கள் மீது, இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து, சாம்ராஜ்நகரின் கிழக்கு போலீஸ் நிலையத்தில், முதியவரின் குடும்பத்தினர் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் வெறும் அடிதடி என, புகாரை பதிவு செய்து கொண்டு வழக்கை மூடியதாக, குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.