/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'விதிமுறைகளை பின்பற்றாத போலீசார் மீது வழக்கு பாயும்'
/
'விதிமுறைகளை பின்பற்றாத போலீசார் மீது வழக்கு பாயும்'
'விதிமுறைகளை பின்பற்றாத போலீசார் மீது வழக்கு பாயும்'
'விதிமுறைகளை பின்பற்றாத போலீசார் மீது வழக்கு பாயும்'
ADDED : டிச 17, 2025 06:30 AM
பெங்களூரு: ''பெங்களூரு போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களும் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது கட்டாயம்,'' என போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் கார்த்திக் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் பிறப்பித்த உத்தரவு:
சட்டங்களை செயல்படுத்தும் போலீசார், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வாகனங்களில் பயணிக்கும் போலீசார் ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, என் கவனத்துக்கு வந்துள்ளது. வாகனங்களை ஓட்டும் போது, மொபைல் போன் பயன்படுத்துவதும் அதிகரிக்கிறது.
போக்குவரத்து விதிமுறைகளை, பொது மக்கள் பின்பற்றும்படி பார்த்து கொள்வதுடன், பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளும், ஏட்டுகளும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய போலீசாரே, விதிமுறைகளை மீறினால், பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரம், போலீசாருக்கு இருக்காது.
நாம் ஒழுங்கை பின்பற்றினால், பொது மக்களும் நம்மை பின் பற்றுவர். போக்குவரத்து விதிமுறைகளுக்கும் மதிப்பு கிடைக்கும்.
எனவே நகர போக்குவரத்து போலீஸ் பிரிவின் அனைத்து அதிகாரிகள், ஏட்டுகள் வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது உட்பட, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

