/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மானபங்கம் செய்த போலீசார்; பா.ஜ., பெண் தொண்டர் 'திடுக்'
/
மானபங்கம் செய்த போலீசார்; பா.ஜ., பெண் தொண்டர் 'திடுக்'
மானபங்கம் செய்த போலீசார்; பா.ஜ., பெண் தொண்டர் 'திடுக்'
மானபங்கம் செய்த போலீசார்; பா.ஜ., பெண் தொண்டர் 'திடுக்'
ADDED : ஜன 08, 2026 05:51 AM

ஹூப்பள்ளி: பா.ஜ., பெண் பிரமுகரை, போலீசார் மானபங்கம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த ஹூப்பள்ளி போலீஸ் கமிஷனர், 'அவராகவே தனது ஆடைகளை கிழித்து கொண்டார்' என்று விளக்கம் அளித்து உள்ளார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் சில நாட்களுக்கு முன் சாளுக்யா நகரின் கேசவ்பூரில், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், பிளாக் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் சுஜாதா ஹண்டி உட்பட சிலர், அதிகாரிகளுக்கு உதவினர். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கவுன்சிலர் சுவர்ணா மற்றும் பிரமுகர்கள் சிலர், சுஜாதா ஹண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கவுன்சிலர் சுவர்ணாவை, சுஜாதா ஹண்டி தாக்கியதாக, கேசவபூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுஜாதாவை கைது செய்ய, போலீசார் கடந்த 5ம் தேதி சென்றனர்.
இதையறிந்த பா.ஜ.,வினர், சுஜாதா வீட்டி ன் முன் குவிந்தனர். அங்கிருந்த போலீசார், சுஜாதாவை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
வாகனத்திற்குள் அவரது ஆடைகள் கிழிக்கப்படும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக, தார்வாட் - ஹூப்பள்ளி நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேற்று அளித்த பேட்டி:
சுஜாதா ஹண்டி மீது வந்த புகார் தொடர்பாக அவரை விசாரிப்பதற்காக, போலீசார் சென்றனர்.
சுஜாதாவை பற்றி அறிந்த கேசவபூர் எஸ்.ஐ., கூடுத லாக வேறு போலீஸ் நிலையத்தில் இருந்து மகளிர் போலீசாரை அழைத்து சென்றார்.
சுஜாதா மீது இதுவரை ஒன்பது வழக்குகள் பதிவாகி உள்ளன. சுஜாதா மீது பதிவான புகார்கள் குறித்து அவரிடம் தெரிவித்தோம். எங்களிடம் இருந்து தப்பிக்க, போலீசாரை தள்ளினார்.
ஆனால் மகளிர் போலீசார், அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவராகவே ஆடைகளை கிழித்து கொண்டார்.
அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த ஆடைகளை வாங்கி, சுஜாதாவிடம் கொடுத்து அணிய வைத்தோம்.
இந்த களேபரத்தில் எங்கள் ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாய் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., பணியின் போது தேர்தல் அதிகாரிகளுக்கு, சுஜாதா உதவினார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் கவுன்சிலர் சுவர்ணா, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இப்பகுதியில் பலர் சட்ட விரோதமாக தங்கி உள்ளனர். அவர்களுக்கு காங்கிரசார் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணி நடந்தால், உண்மை வெளிவந்துவிடும் என்று அஞ்சி ரகளையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்துக்கு பின், மூன்று நாட்களில், சுஜாதா மீது கேசவபூர் போலீஸ் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவாகி உள்ளன.
சுஜாதாவை கைது செய்யும் போது, போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர்.
இச்செயலில் ஈடுபட்ட போலீசார் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

