தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹொஸ்கோட்டில் பிரியாணி கடைகளை காலை 6 மணிக்கு திறக்க போலீஸ் உத்தரவு 

 ஹொஸ்கோட்டில் பிரியாணி கடைகளை காலை 6 மணிக்கு திறக்க போலீஸ் உத்தரவு 

 ஹொஸ்கோட்டில் பிரியாணி கடைகளை காலை 6 மணிக்கு திறக்க போலீஸ் உத்தரவு 


ADDED : ஆக 23, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹொஸ்கோட்: ஹொஸ்கோட்டில், 'பிரியாணி கடைகளை காலை 6:00 மணிக்கு தான் திறக்க வேண்டும்' என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூரில் இருந்து கோலார் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஹொஸ்கோட் முக்கிய நகரமாக உள்ளது.

ஹொஸ்கோட் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, அதிகாலையில் அங்கு கிடைக்கும் சூடான, 'தம் பிரியாணி' தான்.

ஹொஸ்கோட்டில் நிறைய பிரியாணி கடைகள் இருந்தாலும், 'தம் பிரியாணி'க்கு பெயர் பெற்ற குறிப்பிட்ட சில கடைகள் உள்ளன. இக்கடைகள் அனைத்து நாட்களும் திறக்கப்படுவது இல்லை. வார இறுதி நாட்களில் மட்டுமே திறக்கப்படுகிறது.

அந்த கடைகளில் பிரியாணி வாங்கி சாப்பிட பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்வோர், வார இறுதி நாட்களில் இரவே அங்கு சென்று, மணிக்கணக்கில் காத்து நிற்கின்றனர்.

பிரியாணி சாப்பிட செல்வோர், தங்கள் வாகனங்களை, குறுகிய சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் மாலுார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலையில் பயணிக்கும் சரக்கு லாரிகள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், அதிகாலையிலேயே பிரியாணி சாப்பிட வேண்டும் என்று, தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வாகனங்களை ஓட்டி வருவோர் விபத்தையும் ஏற்படுத்துகின்றனர். பிரியாணி கடையிலும், கூட்ட நெரிசலால் சண்டை ஏற்படுகிறது.

இதை எல்லாம் கருதி, பிரியாணி கடைகள் திறக்கும் நேரத்தை, காலை 4:00 மணியில் இருந்து 6:00 மணியாக மாற்றி, ஹொஸ்கோட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டத்தை முறையாக நிர்வகிக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடைகளின் உரிமையாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும், போலீசார் கேட்டு கொண்டனர்.

இதையும் மீறி, அதிகாலையில் கடையை திறந்து ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், கடை உரிமையாளர்களே பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us