/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச சைகை காட்டிய ஷாருக்கான் மகன் 'பப்' மேலாளரிடம் போலீசார் விசாரணை
/
ஆபாச சைகை காட்டிய ஷாருக்கான் மகன் 'பப்' மேலாளரிடம் போலீசார் விசாரணை
ஆபாச சைகை காட்டிய ஷாருக்கான் மகன் 'பப்' மேலாளரிடம் போலீசார் விசாரணை
ஆபாச சைகை காட்டிய ஷாருக்கான் மகன் 'பப்' மேலாளரிடம் போலீசார் விசாரணை
ADDED : டிச 06, 2025 05:32 AM

அசோக்நகர்: பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், ஆபாச சைகை காட்டிய விவகாரத்தில், பப் மேலாளரிடம் கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான்; இவரது மகன் ஆர்யன்கான், 28. திரைப்பட தயாரிப்பாளர். கடந்த மாதம், 28ம் தேதி பெங்களூரு அசோக்நகரில் உள்ள, 'பப்' பிற்கு வந்தார்.
பப் பால்கனியில் நின்று கீழே நின்றவர்களை பார்த்து, இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சிரித்தபடி ஆபாச சைகை செய்தார்.
ஆர்யன்கான் அருகே நின்ற, கர்நாடகா வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகானின் மகன் ஜயித் கான், சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸின் மகன் முகமது நலபட் ஆகியோர், ஆர்யன்கான் ஆபாசமாக சைகை காட்டியதை பார்த்து சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கப்பன் பார்க் போலீசார், வீடியோவில் இருந்த பப் பிற்கு சென்றனர். அங்கிருந்த மேலாளரிடம், ஆர்யன்கான் எதற்காக ஆபாசமாக சைகை காட்டினார்.
ரசிகர்கள் கூச்சலிட்டதால் அப்படி நடந்து கொண்டாரா என்பது உட்பட, பல கேள்விகளை எழுப்பி ஒரு மணி நேரம் விசாரித்தனர்.
இதற்கிடையில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சரின் மகன் ஜயித் கான் கூறுகையில், ''ஆர்யன்கான் எனக்கு நீண்ட கால நண்பர். அவர் பப்பிற்கு வந்த போது, கீழே கூட்டத்தில் நின்று நண்பர் ஒருவர் நடனமாடினார். அவரை நோக்கி தான் ஆர்யன் ஆபாச சை கை காட்டினார். அந்த நேரத்தில், அது தவறு என்று நான் நினைக்கவில்லை. வீடியோ வெளியான பிறகே தவறு நடந்தது தெரிந்தது,'' என்றார்.
பப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு வேளை பெண்க ள் யாரையாவது பார்த்து ஆர்யன்கான் ஆபா ச சைகை காட்டி இருந்தால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

