/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் இன்று போலீஸ் நினைவு தினம்
/
தங்கவயலில் இன்று போலீஸ் நினைவு தினம்
ADDED : அக் 21, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் இன்று போலீஸ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
தங்கவயல் போலீஸ் மாவட்டம் சார்பில் ராபர்ட்சன் பேட்டை போலீஸ் நிலைய சதுக்கத்தில் உள்ள போலீஸ் நினைவு சிலைக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்ச்சி இன்று காலை 8:00 மணிக்கு நடக்கிறது.
தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத் தலைமை வகிக்கிறார். நாடு முழுதும் போலீஸ் சேவையின் போது, உயிர் நீத்த போலீசாரை நினைவு கூர்ந்து அணிவகுப்பு மரியாதை நடக்கிறது.
தங்கவயல் செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமார், தங்கவயல் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.