தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடும்பத்துடன் காணாமல் போன நபர் மீது போலீசார் சந்தேகம்

 குடும்பத்துடன் காணாமல் போன நபர் மீது போலீசார் சந்தேகம்

 குடும்பத்துடன் காணாமல் போன நபர் மீது போலீசார் சந்தேகம்


ADDED : ஆக 22, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: கடன் தொல்லையால் குடும்பத்தின் நான்கு பேர் காணாமல் போனதில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி கொண்டு ஓடியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தாவணகெரே நகரின் பனசங்கரி லே - அவுட்டில் வசித்த ரமேஷ்குமார், ஜெயசீலா தம்பதி, தங்களின் இரண்டு குழந்தைகளுடன், ஆகஸ்ட் 14ம் தேதியன்று, திடீரென காணாமல் போயினர்.

ரமேஷ்குமார் ஒப்பந்ததாரராக பணியாற்றினார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். பொதுமக்களிடமும் பணம் வசூலித்து, முதலீடு செய்திருந்தார்.

ஷேர் மார்க்கெட்டிங் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன்காரர்களின் நெருக்கடியால், ரமேஷ்குமார் கடிதம் எழுதி வைத்து விட்டு, குடும்பத்துடன் மாயமானார்.

இவரது தாய் அளித்த புகாரின்படி, இவர்களை போலீசார் தேடுகின்றனர். இதற்கிடையே ரமேஷ்குமாரின் செயல், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ்குமாரின் நண்பர் ரமேஷும், அவரது மனைவி சாயாவும், 'ஈஸ்வரி என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை துவக்கினர்.

இதில் முதலீடு செய்தால், மாதந்தோறும் 4 முதல் 6 சதவீதம் லாபம் தருவதாக ஆசை காண்பித்து, நுாற்றுக்கணக்கானோரிடம் 7.27 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தனர்.

2023 ஏப்ரல் 15ம் தேதி குடும்பத்துடன் காணாமல் போனார். இதுவரை அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

ரமேஷ்குமாரும் ரமேஷும் நண்பர்கள். ரமேஷ் மனைவி சாயா, சகோதரர் ஜெகதீஷ் மீது தாவணகெரே போலீஸ் நிலையத்தில், புகார் அளித்திருந்தார். இப்போது ரமேஷ்குமாரும் பணம் வசூலித்து, குடும்பத்துடன் மாயமாகயுள்ளார்.

நண்பர்கள் சேர்ந்து நாடகமாடுகின்றனரா, மோசடியாக இருக்குமா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us