தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆசிய போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனை பூவம்மா

 ஆசிய போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனை பூவம்மா

 ஆசிய போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனை பூவம்மா


ADDED : செப் 30, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- -- நமது நிருபர் -: கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் பூவம்மா, 36. பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை. இந்தியாவின் மிக சிறந்த, 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவர்.

இவர் தனது, 18 வயதிலேயே, 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் பயிற்சி முகாமில் தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஆட்டத்தில், நம் நாட்டின் சார்பாக பங்கேற்றார். எதிர்பாராத விதமான தோல்வியை தழுவினார்.

இதே போல 2014, 2018ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என, பதக்கங்களை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில், 2021ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டிலிருந்து மீண்டும் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க து வங்கினார்.

இந்நிலையில், இவர் தற்போது ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய அணியின், 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தே ர்வு செய்யப்பட்டார்.

இது பல விமர்சனத்தை எழுப்பியது. 36 வயதில் இவர் எப்படி வேகமாக ஓடி பதக்கத்தை பெறுவார். இவருக்கு பதிலாக வேறு இளம் வீராங்கனையை தேர்வு செய்யுங்கள் என்ற கருத்து எழுந்தது.

இதையெல்லாம் மனதில் வைத்து கொண்ட பூவம்மா, கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், நேற்று முன்தினம் நடந்த மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து இரு பதக்கங்களை பெற்று, நாட்டுக்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

இந்த இரண்டு பதக்கங்களை யும் சேர்த்து, ஆசிய விளையாட்டு போட்டியில் ஆறு பதக்கங்களை பெற்றுள்ளேன். ஊக்கமருந்து தடையால், 2021 ஒலிம்பிக், 2023 ஆசிய போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது, நான் தங்கம், வெள்ளி என இரு ப த்தகங்கள் வாங்கினேன்.

வயது என்பது வெறும் எண் மட்டுமே. கடின உழைப்பு மட்டுமே முக்கியம். நான் விளையாட்டை நேசிக்கிறேன். 40 வயதானாலும் ஓடுவேன். ஓய்வுபெறும் மனநிலை இல்லை. எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

ஆனால், கர்நாடக அரசிடமிருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மற்ற மாநில அரசுகள் தங்கள் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்றன. ஆனால், கர்நாடகாவை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் தருவதாக மாநில அரசு அறிவித்தது. இதுவரை அந்த தொகையும் கிடைக்கவில்லை.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us