தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோஷ்டி மாறும் பிரதீப் ஈஸ்வர்

 கோஷ்டி மாறும் பிரதீப் ஈஸ்வர்

 கோஷ்டி மாறும் பிரதீப் ஈஸ்வர்


ADDED : செப் 08, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'அடுத்த முதல்வர் சித்தராமையா' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், இரண்டு முறை கோஷமிட்டது, அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியது.

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் கூட்டமைப்பு மாநாடு, பெங்களூரில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உட்பட, பலர் பங்கேற்றனர்.

இதில் சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், ' என் மனதில் ராமனும் இருக்கிறார். சித்தராமையாவும் இருக்கிறார். சித்தராமையா குருபர் சமுதாய தலைவர் மட்டுமின்றி, அஹிந்த சமுதாய தலைவராகவும் விளங்குகிறார். அவரை ஆடு மேய்ப்பவர் என, பலரும் விமர்சித்தனர். ஆனால் இவர் அதிக எண்ணிக்கையில், பட்ஜெட் தாக்கல் செய்தவர்' என புகழ்ந்தார்.

அது மட்டுமின்றி, 'அடுத்த முதல்வர் சித்தாமையா தான்' என, கோஷமிட்டார்.

இது அரசியல் வட்டாரத்தில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் வரை, பிரதீப் ஈஸ்வர், முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாக நின்று, மத்திய அமைச்சர் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் பதவி எதிர்பார்த்து, முதல்வர் சிவகுமாருடன் இருந்தார்.

ஆனால், இப்போது திடீரென, சித்தராமையாவை அதிகமாக புகழ்ந்ததுடன், 'அடுத்த முதல்வர்' என, கோஷமிட்டார்.

தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், சித்தராமையா கோஷ்டிக்கு பிரதீப் ஈஸ்வர் தாவிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us