/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் ரேவண்ணா மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
/
பிரஜ்வல் ரேவண்ணா மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
ADDED : டிச 12, 2025 06:44 AM

-: பாலியல் வழக்கை, தற்போதைய விசாரணை நீதிமன்றத்தில் இருந்த வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய, பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வலுக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பிரஜ்வல் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, பிரஜ்வல் தரப்பு வக்கீல், 'பிரஜ்வலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க வேண்டும்' என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், தண்டனையை நிறுத்தி வைக்கும் மனு மீதான விசாரணையை, ஜன., 12க்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில், தன் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை, முதல் வழக்கில் தனக்கு தண்டனை வழங்கிய அதே நீதிபதி விசாரிக்க கூடாது. வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பிரஜ்வல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மல்யா பகசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வக்கீல்கள் வாதங்களையும் கேட்டபின், தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வரும் தற்போதைய வழக்கு விசாரணையில், மனுதாரருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தி நீதிபதி தீர்ப்பளிப்பார்.
முந்தைய வழக்கில் மனுதாரர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார் என்பதற்காக, அதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கமாட்டார். எனவே, விசாரணை நீதிமன்ற நீதிபதி பாரபட்சமாக நடந்து கொள்வார் என்ற மனுதாரரின் கூற்றை ஏற்க முடியாது. அவரின் மனு தள் ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
- நமது நிருபர் .

