/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் ஜாமின் 24க்கு ஒத்திவைப்பு
/
பிரஜ்வல் ஜாமின் 24க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:29 PM
பெங்களூரு: வீட்டு வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நேற்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய மற்றொரு வழக்கு விசாரணை, கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்த வழக்கு முடிந்ததும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு, விசாரணை நீதிமன்றத்தில் கோரி உள்ளோம். இவ்வழக்கு அடுத்த வாரம் அல்லது 15 நாட்களுக்குள் துவங்கும். எனவே, பிரஜ்வலுக்கு ஜாமின் வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பிரஜ்வல் வக்கீல் வாதிடுகையில், 'இவ்வழக்கு தொடர்பாக, ஓராண்டுக்கும் மேலாக பிரஜ்வல் சிறையில் உள்ளார். 157 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். முதல் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதில் இருந்து வழக்கு விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை. சிறையிலேயே பிரஜ்வல் வாடக்கூடாது' என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.