/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையில் தொழுகை: பரமேஸ்வர் கருத்து
/
சாலையில் தொழுகை: பரமேஸ்வர் கருத்து
ADDED : அக் 20, 2025 07:02 AM

பெங்களூரு: ''சாலையில் தொழுகை நடத்த, அனுமதி மறுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் ஒருவருக்கு ஒரு சட்டம், மற்றொருவருக்கு வேறு சட்டம் கொண்டு வர, அரசால் முடியாது. சாலையில் தொழுகை நடத்த, அனுமதி மறுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.
ஆர்.எஸ்.எஸ்., புதிய சங்கம் அல்ல. 100 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். அன்று முதல் நாட்டில் குழப்பங்கள் உள்ளன.
இது பற்றி அவ்வப்போது விவாதம் ஏற்படுகிறது. அந்தந்த காலத்தில் அரசுகள், நடவடிக்கை எடுத்துள்ளன. 2013ல் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்கு, கட்டுப்பாடு விதித்திருந்தார்.
காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்தால், தகராறு செய்கின்றனர். ஜெகதீஷ் ஷெட்டரின் உத்தரவை, கண்டும், காணாமல் இருந்தனர். தேவையற்ற விவாதங்கள் வேண்டாம் என, நாங்கள் மவுனமாக இருக்கிறோம். பஜ்ரங் தளத்தை தடை செய்வது குறித்து, தற்போதைக்கு அரசு ஆலோசிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பங்கேற்ற, பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது சரிதான். அரசு ஊழியர்கள், தனியார் சங்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. உறுப்பினராகவும் கூடாது.
பொது இடங்களில் தனியார் அமைப்புகள், சங்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க, அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். இது குறித்து, அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.