/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் முன்னேற்பாடுகள் தயார்: பிரதீப் ஈஸ்வர்
/
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் முன்னேற்பாடுகள் தயார்: பிரதீப் ஈஸ்வர்
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் முன்னேற்பாடுகள் தயார்: பிரதீப் ஈஸ்வர்
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் முன்னேற்பாடுகள் தயார்: பிரதீப் ஈஸ்வர்
ADDED : ஜூன் 15, 2025 11:15 PM

சிக்கபல்லாபூர்: ''நந்தி மலையில் வரும் 19ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்துக்கான பணிகள் தயாராக உள்ளன,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் தெரிவித்தார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில், ஏப்ரலில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், வரும் 19ம் தேதி சிக்கபல்லாபூர் மாவட்டம், நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நந்தி மலையில் உள்ள இக்கூட்டம் நடக்கும் கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின், 'மயூரா பைன் டாப்' உணவகம், மலை பகுதிகளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் நேற்று பார்வையிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி:
இதுவரை யாரும் நடத்தாத அமைச்சரவை கூட்டம் இங்கு நடக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம், கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் அதிக நிதி கிடைக்கும்.
இக்கூட்டத்தின் போது, மலர் சந்தை அமைக்க 150 கோடி ரூபாய்; ஜக்கமலமடகு அணை உயரத்தை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்படும்.
ஜூன் 19ல் இங்குள்ள போக நந்தீஸ்வரர் கோவிலுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்வர். அதனை தொடர்ந்து, நந்தி மலையில் அமைச்சர்களுடனான குழு படம் எடுக்கப்படும். அதன் பின்னரே அமைச்சரவை கூட்டம் நடக்கும்.
சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு வகிக்கும் உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா, மாவட்டத்துக்கு காவிரி நீர் வழங்கல், மெட்ரோ ரயில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, மாவட்ட மருத்துவமனைக்கான மானியம், சாலைகள், மேம்பாடு, ஏரிகளை புனரமைத்தல், மாவட்ட திறன் பயிற்சி மையம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொட்டபல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., தீரஜ் முனிராஜு அளித்த பேட்டி:
அனைத்து அமைச்சர்களும் சுற்றுலா தலத்தில் ஜாலியாக அமைச்சரவை கூட்டம் நடத்துவர். நந்தி மலைக்கு அமைச்சர்கள் வந்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் ஒரு நாள் இங்கு தங்கி, நந்தி மலைக்கு சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும்.
மலை மஹாதேஸ்வரா மலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, தொட்டபல்லாபூரில் குப்பைகள் கொட்ட முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
நந்தி மலையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், வேறு எங்கு குப்பை கொட்டுவது என்று முடிவு செய்வரோ என்று அச்சமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நந்தி மலையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை பார்வை யிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.