தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'தேர்தலுக்கு உடனடியாக தயாராகுங்கள்' பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவு

'தேர்தலுக்கு உடனடியாக தயாராகுங்கள்' பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவு

'தேர்தலுக்கு உடனடியாக தயாராகுங்கள்' பா.ஜ., தலைவர்களுக்கு மேலிடம் உத்தரவு


UPDATED : நவ 03, 2026 03:47 AM

ADDED : நவ 03, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 03:47 AM ADDED : நவ 03, 2026 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 2028 சட்டசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுங்கள் என்று, அங்குள்ள பா.ஜ., தலைவர்களுக்கு, மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் திவேதி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின், முதல்முறையாக ஹரிஷ் திவேதி நேற்று பெங்களூரு வந்தார். மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜயேந்திரா, துணை தலைவர்கள், செயலர்களுடன் கட்சியை அமைப்புரீதியாக வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி, சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

பின், ஹரிஷ் திவேதி தலைமையில் கர்நாடக பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எம்.பி.,க்கள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார்ஜோள், எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை தலைவர் சலவாதி நாராயணசாமி, விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஹரிஷ் திவேதி பேசியதாவது:

அசாம் மாநிலத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி அபாரமானது. அங்கு கட்சிக்கு அமைப்பு ரீதியான ஆதரவு இல்லை. ஆனாலும் நாம் ஆட்சியில் இருக்கிறோம். கர்நாடகாவிலும் நம்மால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். வரும் 2028 சட்டசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுங்கள். உங்களுக்கு கிடைத்த நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இங்கு நடந்த எம்.எல்.சி., தேர்தலுக்காக உழைத்த அனைத்து தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டுகள். மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு ஆதரவான சூழல் உள்ளது.

மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us