/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கைதிகளுக்கு கஞ்சா சிறை வார்டன் கைது
/
கைதிகளுக்கு கஞ்சா சிறை வார்டன் கைது
ADDED : டிச 07, 2025 07:51 AM

பரப்பன அக்ரஹாரா: டிச. 7-: சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் எடுத்து சென்ற, சிறை வார்டன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பயங்கரவாதி ஷகீல் மன்னா உள்ளிட்ட கைதிகள் மொபைல் போன் பயன்படுத்திய வீடியோ வைரலான நிலையில், சிறையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சிறையில் வார்டனாக வேலை செய்யும் ராகுல் பாட்டீல், 34 என்பவர், நேற்று காலை பணிக்கு வந்தார். சிறையின் நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ராகுலின் பையை சோதனை செய்த போது, இரண்டு சிகரெட் பாக்கெட்டுகள், சிறிய பொட்டலத்தில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் பரமேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அளித்த புகாரில் பரப்பன அக்ரஹாரா போலீசார் ராகுல் பாட்டீலை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிகரெட் பாக்கெட்டுகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதிகளுக்கு சப்ளை செய்ய வாங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

