தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தன்னை பார்க்க வராத மனைவியை கொல்ல கூட்டாளிகளை ஏவிய கைதி

 தன்னை பார்க்க வராத மனைவியை கொல்ல கூட்டாளிகளை ஏவிய கைதி

 தன்னை பார்க்க வராத மனைவியை கொல்ல கூட்டாளிகளை ஏவிய கைதி


ADDED : ஜூன் 11, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: புர்கா அணிந்து பெண்ணை கொலை செய்ய வந்த மூவரை, பொதுமக்களே அடித்து, துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஷிவமொக்கா நகரின், கே.ஆர்.புரம் சாலையில் வசிப்பவர் சாது, 28. இவரது மனைவி தபுசும் பானு, 22. ரவுடியான சாது, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஷிவமொக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறைக்கு சென்று, நீண்ட நாட்களாகியும் மனைவி தபுசும் பானு கணவரை பார்க்க வரவில்லை. இது, சாதுவுக்கு மிகவும் கோபத்தை அளித்தது.

தன்னை பார்க்க வராத மனைவியை, கொலை செய்ய சிறையில் இருந்தே, சதித்திட்டம் தீட்டினார். தன் கூட்டாளிகள் நால்வரை, மனைவியை கொலை செய்ய ஏவினார்.

அவர்களும் அடையாளம் தெரியாமல் புர்கா எனும், முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுதும் மூடி அணியும் ஆடை அணிந்துகொண்டு, நேற்று காலை, தபுசும் பானு வீட்டுக்குள் புகுந்தனர்.

அவரை கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் பயந்து அலறினார். அவரது அலறலை கேட்டு, அப்பகுதியினர் உதவிக்கு வந்தனர். மக்களை கண்டதும் நான்கு நபர்களும் தப்பியோட துவங்கினர். அவர்களை அப்பகுதியினர், விரட்டி பிடித்தனர்.

அவர்களில், மூவர் பிடிபட்டனர். ஒருவர் தப்பியோடிவிட்டார். கையில் சிக்கிய மூவரை அடித்து, துவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட மூவர் தர்ஷன், 18, மகேஷ், 20, அஸ்லாம், 25, என்பது தெரிந்தது. சிறையில் உள்ள ரவுடி சாதுவின் உத்தரவுபடி, அவரது மனைவியை கொலை செய்ய வந்ததை அவர்கள் தெரிவித்தனர். மூவரிடமும் விசாரணை தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us