/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
/
தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
தெரு நாய்கள் கணக்கெடுப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
ADDED : டிச 02, 2025 04:28 AM
பெங்களூரு: பெங்களூரில் பள்ளி வளாகத்தில் உள்ள தெரு நாய்களை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதற்கு, தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பெங்களூரில் பள்ளி, கல்லுாரி வளாகங்களில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து கல்வி நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தனியார் பள்ளி சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இது குறித்து, சங்கத்தினர் கூறியதாவது:
தெரு நாய்களை கணக்கிடுவது எங்கள் பணியல்ல. அது மாநகராட்சியின் பணி. அதுவும் மூன்று நாட்களுக்குள் நாய்களை கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது முடியாத காரியம். ஏற்கனவே, பள்ளிகளில் வேலை பார்க்கும் பாதுகாவலர்களுக்கு பல வேலைகள் உள்ளன. எனவே, இந்த வேலையை யாரை வைத்து செய்வது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.