/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரியங்க் கார்கேவுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி
/
பிரியங்க் கார்கேவுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி
ADDED : ஜூன் 21, 2025 11:10 PM

பெங்களூரு: அமெரிக்கா செல்வதற்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்காக, கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே சென்றிருந்தார்.
அங்கிருந்து அமெரிக்க செல்ல விரும்பினார். ஆனால், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவர் ஆத்திரத்துடன் பெங்களூரு திரும்பினார். மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டினார்.
நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கூறும்படி கேட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று, பிரியங்க் கார்கே, அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து கார்கே, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் இம்மாதம் 14 முதல் 27ம் தேதி வரை சர்வதேச உயிரியல் மாநாடு, ஆட்டோமேஷன் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, மத்திய அரசிடம், மே 15ம் தேதி அனுமதி கேட்டேன். காரணங்கள் எதுவும் கூறாமல், அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, அமெரிக்காவில் நிகழ்ச்சிகள் முடியும் தருவாயில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உண்மையான நோக்கம் என்ன; தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் கர்நாடகாவிற்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.