ADDED : ஜூலை 03, 2025 05:10 AM
பெங்களூரு: இணையதளம் மூலம், 'இ - பட்டா' பெறுவதில் சர்வர் பிரச்னை ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கு, 'இ - பட்டா' கட்டாயம். இது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது.
ஒன்பது மாதங்கள் கடந்தும், நகரில் உள்ள 25 லட்சம் சொத்துகளில், 5.34 லட்சம் சொத்துகளுக்கு மட்டுமே இதுவரை இ - பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த இ - பட்டாக்களை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. இருப்பினும், பலரும் இணையதளம் மூலம் பட்டாக்களை வாங்குவதையே விரும்புகின்றனர்.
சமீப காலமாக இணையதளம் மூலம் பட்டா பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது சர்வர் வேலை செய்வதில்லை.
இதனால், பட்டா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இணையதளமே செயல்படுவதில்லை.
அனைத்து ஆவணங்களையும் பதிவிட்ட பிறகு, சர்வரில் ஏதோ பிரச்னை என, தகவல் வருவதாக சிலர் புலம்புகின்றனர். இதனால், இ - பட்டா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.