தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது அமைச்சர் யதீந்திரா திட்டவட்டம்

 வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது அமைச்சர் யதீந்திரா திட்டவட்டம்

 வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது அமைச்சர் யதீந்திரா திட்டவட்டம்


ADDED : செப் 29, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: ''வாக்குறுதி திட்டங்களுக்கு, அதிகமான பணம் செலவாவது உண்மைதான். ஆனால் அதற்காக வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது,'' என நகர வளர்ச்சி துறை அமைச்சர் யதீந்திரா தெரிவித்தார்.

ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தலுக்கு முன், இலவச வாக்குறுதி திட்டங்களை காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி திட்டங்களை செயல்படுத்துவது, அரசின் கடமையாகும்.

வாக்குறுதி திட்டங்களுக்கு, அதிகமான பணம் செலவாவது உண்மைதான். ஆனால் எந்த காரணத்தை கொண்டும், இத்திட்டங்கள் நிறுத்தப்படாது. பொருளாதார சுமை என்பதால், பொறுப்பில் இருந்து நழுவ முடியாது.

மக்களின் நன்மைக்காக, வாக்குறுதி திட்டங்களுடன், மேலும் பல புதிய திட்டங்களையும், மாநில அரசு செயல்படுத்துகிறது. அரசு கருவூலம் காலியானதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டு.

நிதி பற்றாக்குறையை காரணம் காண்பித்து, எந்த திட்டங்களையும் அரசு நிறுத்தவில்லை. கருவூலம் காலியாக உள்ளது என்றால், கடலோர பகுதிகளின் மேம்பாட்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்க முடியுமா.

கர்நாடகாவில் அஹிந் தா சமுதாயம்பலவீனமாகவில்லை. அஹிந்தா அமைப்பு என்பது, கட்சி சார்பற்றது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித் சமுதாயங்களை பலப்படுத்துவதே, காங்கிரசின் அடிப்படை நோக்க மாகும்.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அஹிந்தா அமைப்பு பலவீனமடைவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

முதல்வர் சிவகுமார், தானும் கூட அஹிந்தா என கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் போது, மாநிலத்தின் அனைத்து பின்தங்கிய சமுதாயங்களை ஒருங்கிணைத்து, பிரம்மாண்ட மாநாடு நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us