sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூபாவுக்கு பதவி உயர்வு

ரூபாவுக்கு பதவி உயர்வு

ரூபாவுக்கு பதவி உயர்வு


ADDED : ஜூன் 01, 2025 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 06:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஐ.ஜி.,யாக இருந்த ஐ.பி.எஸ்., ரூபாவுக்கு, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுபவர் ரூபா, 49. தற்போது, கர்நாடக அரசின் பட்டு சந்தைப்படுத்துதல் கழக நிர்வாக இயக்குநராக உள்ளார். ஐ.ஜி., தரவரிசையில் இருந்தார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரியுடன் ஏற்பட்ட மோதலால், மாநில அரசு தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்றும், பதவி உயர்வு வழங்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் ரூபா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, இரண்டு மாதங்களுக்குள் ரூபாவுக்கு பதவி உயர்வு வழங்குவது பற்றி, அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 25ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ரூபாவை, கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு செய்து அரசு நேற்று உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை, தற்போது உள்ள பணியில் அவர் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us