/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்., வடக்கு மாநகராட்சியில் ரூ.548 கோடி சொத்து வரி வசூல்
/
பெங்., வடக்கு மாநகராட்சியில் ரூ.548 கோடி சொத்து வரி வசூல்
பெங்., வடக்கு மாநகராட்சியில் ரூ.548 கோடி சொத்து வரி வசூல்
பெங்., வடக்கு மாநகராட்சியில் ரூ.548 கோடி சொத்து வரி வசூல்
ADDED : நவ 05, 2025 11:52 PM
பெங்களூரு: பெங்களூரு வடக்கு மாநகராட்சியில் 548 கோடி ரூபாய் சொத்து வரி வசூலாகி உள்ளதாக, கமிஷனர் பொம்மலா சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு வடக்கு மாநகராட்சியில் 3,36,989 குடியிருப்பு சொத்துகள், 15,949 குடியிருப்பில்லா சொத்துகள், 23,214 குடியிருப்பு, குடியிருப்பில்லா சொத்துகள், 81,799 காலி வீட்டுமனைகள் உள்ளன. மொத்தம் 4,57,951 சொத்துகள், வடக்கு மாநகராட்சியின் எல்லைக்குள் வருகின்றன.
இந்த நிதி ஆண்டில் 1,242 கோடி ரூபாய், சொத்து வரி வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 548 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. 694 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளது.
சொத்து வரி செலுத்தாமல் அதிக ரூபாய் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சொத்துகளை கண்டறிந்து, அவற்றை அதிகார வரம்பில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக வருவாய் துறை ஊழியர்களை உள்ளடக்கிய சிறப்பு மீட்பு குழு அமைக்கப்படும். 1,697 சொத்துகளுக்கு வருவாய் திருத்தம் தேவைப்படுகிறது. நோட்டீஸ் கொடுத்தும் வரி செலுத்தாவர்களின் சொத்துகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

