நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்., - எம்.எல்.ஏ., ஆருடம்
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவியில் அமர்ந்தே தீருவார். அதற்கு காலம் கூடி வரும்போது, அவர் முதல்வராவார். காங்கிரசின் 135 எம்.எல்.ஏ.,க்களும், சிவகுமாருக்கு ஆதரவாக உள்ளனர். அவருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லையென கூற முடியாது. நல்ல நேரம், காலம் வந்தால் சிவகுமாருக்கு நல்லது நடக்கும். வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தியதால், பொருளாதார பற்றாக்குறை இல்லை. எங்களின் தொகுதிகளுக்கு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
ரவி கானிகா,
காங்., - எம்.எல்.ஏ.,