வாக்குறுதி திட்டத்தில் ஊழல் ராகவேந்திரா குற்றச்சாட்டு
வாக்குறுதி திட்டத்தில் ஊழல் ராகவேந்திரா குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 16, 2026 06:25 AM

ஷிவமொக்கா: ''வாக்குறுதி திட்டங்களில் நடந்த ஊழல் குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும்,'' ஷிவமொக்கா தொகுதி பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா கோரிக்கை விடுத்து உள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அனைவரும் வாக்குறுதி திட்டங்கள் மூலம் பயன்பெறலாம் என அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதி திட்டங்களை அனுபவிக்க பல தகுதிகள் வேண்டும் என கூறி, லட்சக்கணக்கானோரின் முதுகில் குத்திவிட்டது.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மூலம் வெறும் 22 சதவீதம் மக்கள் மட்டுமே பயன் பெறுகின்றனர். அனைவருக்கும் வாக்குறுதி திட்டங்கள் முறையாக கிடைக்க வேண்டும். இத்திட்டங்கள் மூலம் பயன்பெறும் தகுதியற்ற பயனாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதில் நடந்த மிகப்பெரிய ஊழல் குறித்து மாநில அரசு விசாரிக்க வேண்டும். சிவகுமார் பிடதி டவுன்ஷிப் திட்டத்தை செயல்படுத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விவசாயிகள் நலனையும் அவர் கருத்தில் கொடண்டு செயல்பட வேண்டும். ஊழலற்ற அரசை அவரால் நிச்சயம் கொண்டு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
