/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவா, சித்துவுடன் தனித்தனியாக ராகுல் பேசியதால் பரபரப்பு
/
சிவா, சித்துவுடன் தனித்தனியாக ராகுல் பேசியதால் பரபரப்பு
சிவா, சித்துவுடன் தனித்தனியாக ராகுல் பேசியதால் பரபரப்பு
சிவா, சித்துவுடன் தனித்தனியாக ராகுல் பேசியதால் பரபரப்பு
ADDED : ஜன 14, 2026 03:48 AM

மைசூரு: மைசூரு விமான நிலையத்தின் ஓடுபாதையில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனித்தனியாக உரையாடியது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரையாடல் தமிழகத்தின் நீலகிரியில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, டில்லியில் இருந்து நேற்று காலை சிறப்பு விமானத்தில், மைசூரு வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, சித்தராமையா, சிவகுமார் ஒன்றாக வரவேற்றனர். பின், ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு ராகுல் சென்றார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்து கொணடு, டில்லி செல்ல நேற்று மாலை மீண்டும், மைசூரு விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில், சிவகுமாருடன் முதலில் தனியாக உரையாடினார். அந்த நேரத்தில் சித்தராமையாவும் அங்கு வந்தார்.
பின், சித்தராமையாவை தனியாக அழைத்து சென்று உரையாடினார். இருவருடனும் பேசிவிட்டு டில்லி புறப்பட்டு சென்றார். சிவகுமாருடன் உரையாடிய போது, 'கவலைப்பட வேண்டாம் டிகே, கூடிய விரைவில் உங்களை டில்லிக்கு அழைக்கிறேன்' என்று ராகுல் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஊடகங்கள் முன்னதாக நேற்று காலை மைசூரில் சித்தராமையா அளித்த பேட்டி:
நானும், சிவகுமாரும் சேர்ந்து ராகுலை வரவேற்றோம். இப்போது, ராகுல் கூடலுார் சென்று உள்ளார்.
மா லையில் இங்கிருந்தே டில்லிக்கு செல்வார். அவரை வழியனுப்பி வைக்க வருவேன். இந்த சந்திப்பின் போது அரசியல் விவாதம் நடக்காது. தலைமை மாற்றம் குறித்த ஊகங்களை உருவாக்குவது ஊடகங்கள் தான். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பதவி குறித்து பேசுகின்றனர். இதை பெரிதாக எடுத்து கொள்ள வேண் டாம்.
நானோ அல்லது சிவகுமாரோ பேசுவோம். இரண்டரை ஆண்டுகள் பதவி என்று ஒப்பந்தம் போடப்பட்டதாக யார் எங்கு கூறினர். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க, நா ன் உடனடியாக டில்லி செல்ல போவது இல்லை.
இவ்வாறு கூறினார்.

