/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2025 06:29 AM

பெங்களூரு : மெட்ரோ ரயில் மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இன்றும் ஆய்வு தொடர்கிறது.
பெங்களூரில் உள்ள தெற்கு பகுதிகளை மெட்ரோ ரயில் வழியாக அடைய, மஞ்சள் நிற வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 18.88 கி.மீ., துாரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி, கடந்த இரண்டு நாட்களாக, மஞ்சள் நிற வழித்தடத்தில் ஆய்வு செய்து வருகிறார். இவர் தண்டவாளங்களில் மீது டிராலியில் பயணம் செய்து, வளைவுகளில் ரயில் இயக்கம், சிக்னல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார்.
இவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, ரயில்கள் இயக்கப்படும். இவரது ஆய்வு இன்றும் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் கூறுகையில், “அடுத்த 3 நாட்களில் முழுதுமாக சோதனை முடிவடைந்துவிடும். இதையடுத்து, பயணியர் சேவைக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்,” என்றார்.
மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு கமிஷனர்.