ADDED : ஜூலை 14, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
உத்தரகன்னடா: முருடேஸ்வரா ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் விழவிருந்த வாலிபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கேரளாவில் இருந்து, உத்தரகன்னடா வழியாக ராஜஸ்தானுக்கு புறப்பட்ட ரயில், நேற்று காலையில் முருடேஸ்வரா ரயில் நிலையத்தில் வந்து நின்றது. ரயில் கிளம்பும் நேரத்தில், 22 வயது வாலிபர், அவசரமாக ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது நிலை தடுமாறி, ரயில் மற்றும் பிளாட்பாரம் இடையே கீழே விழவிருந்தார்.
இதை பார்த்த ரயில்வே ஊழியர் கணபதி நாயக், விரைந்து வந்து வாலிபரை விழாமல் பிளாட்பாரத்துக்கு இழுத்து, அவரது உயிரை காப்பாற்றினார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
