தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எழுத்தாளர் என்ற அங்கீகாரம் தந்தது 'தினமலர்' 'கடல் தாமரை' புத்தக பூங்காவில் ராஜாமணி நெகிழ்ச்சி 

 எழுத்தாளர் என்ற அங்கீகாரம் தந்தது 'தினமலர்' 'கடல் தாமரை' புத்தக பூங்காவில் ராஜாமணி நெகிழ்ச்சி 

 எழுத்தாளர் என்ற அங்கீகாரம் தந்தது 'தினமலர்' 'கடல் தாமரை' புத்தக பூங்காவில் ராஜாமணி நெகிழ்ச்சி 


ADDED : ஜூன் 17, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''எழுத்தாளர் என்ற அங்கீகாரம், 'தினமலர்' நாளிதழால் தான் கிடைத்தது,'' என, 'கடல் தாமரை' புத்தக பூங்காவில் ராஜாமணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை 'தினமலர்' அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, புத்தக எழுத்தாளர் ராஜாமணி, 87, வந்தார். அவர் எழுதிய, 'ஒற்றுமையே உயர்வு, அப்பா வருவாரா, சன்னதியும் நிம்மதியும், மந்திர பெட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தார்.

பின், அவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர் மதுரை. தமிழக அரசின் நகர திட்டமிடல் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது பெங்களூரு வித்யரண்யபுரா திண்ட்லுவில் உள்ள மகன் வீட்டில் வசிக்கிறேன்.

ஓய்வுக்கு பின் தான் புத்தகம் எழுத ஆரம்பித்தேன். இதுவரை, 20 புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளேன்.

கடந்த, 2013ம் ஆண்டு 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், 'அஸ்தியின் நிறம் என்ன' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரைக்கு, 2,500 ரூபாய் ஊக்க பரிசாக கொடுத்தனர். அப்போது இருந்து தான் புத்தகம் எழுதும் ஆர்வம் வந்தது.

தற்போது எனக்கு, எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு, 'தினமலர்' தான் காரணம்.

என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய, 'தினமலர்' நாளிதழுக்கு கடைசி வரை நன்றியுணர்வுடன் இருப்பேன்.

இங்கு நுாலகம் துவக்கி இருப்பது பற்றி அறிந்ததும், நான் எழுதிய புத்தகங்களை கொடுக்க வந்தேன். மனதிற்கு நிறைவாக உள்ளது.

'தினமலர்' என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக, இந்த நுாலகம் அமைந்துள்ளது. பல தரப்பினரும் இங்கு வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது என்னுடைய முறை. இந்த நுாலகம் மிக பெரிய வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏழு நாட்களும்

பூத்து குலுங்கும்

வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 83108 60601, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us