/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்களை விமர்சித்து ராஜண்ணா சர்ச்சை
/
பெண்களை விமர்சித்து ராஜண்ணா சர்ச்சை
ADDED : நவ 16, 2025 10:55 PM
துமகூரு: ''பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கின்றனர். ஆனால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவது இல்லை,'' என முன்னாள் அமைச்சர் ராஜண்ணா அதிருப்தி தெரிவித்தார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு செயல்படுத்திய திட்டங்களை, பெண்கள் பயன்படுத்துகின்றனர். பஸ்களில் இலவசமாக பயணிக்கின்றனர். ஆனால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவது இல்லை. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போடவில்லை. அவர்கள் ஓட்டு போட்டிருந்தால், நாங்கள் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.
இலவச திட்டங்களில் பயன் பெற்றவர்கள், லோக்சபா தேர்தலில் ஓட்டு போடாதது , வருத்தம் அளிக்கிறது. ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் பெண்களும் கூட, பஸ்களில் 'ஓசி'யில் பயணிக்கின்றனர். இவர்களும் எங்களுக்கு ஓட்டு போடவில்லை.
பீஹாரி ல் தேர்தல் திட்டங்களை, பா.ஜ.,வினர் மாற்றியுள்ளனர். பெண்கள், இளைஞர்களை குறி வைத்து, காய் நகர்த்தினர். இதனால் அக்கட்சியினருக்கு அதிக ஓட்டு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சக்தி திட்டத்தை பயன்படுத்தும் பெண்களை பற்றி விமர்சித்து ராஜண்ணா புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளார்.

